பயணியை தாக்கிய இண்டிகோ விமான ஊழியர்களுக்கு விமானத்துறை அமைச்சர் கண்டனம்

 

டில்லி

ண்டிகோ விமான  ஊழியர்கள் ஒரு பயணியை தாக்கியதற்கு விமானத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து டில்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் டில்லி விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ பேருந்தில் ஏறும் போது அங்குள்ள ஊழியர்களுக்கும் அவருக்கும் தகராறு உண்டாகி அவரை மூன்று ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி தாக்கி உள்ளனர்.  இது வீடியோவாகி இணைய தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.  இந்த செய்தி நமது பத்திரிகை. காம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

பயணியை அடித்து உதைத்த இண்டிகோ விமான ஊழியர்கள்!! அதிர்ச்சி வீடியோ

இதைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத் தலைவர் ஆதியா கோஷ், ”அந்தப் பயணியிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்   இது நமது பண்பாட்டுக்கு மிகவும் எதிரானது.   இண்டிகோ நிறுவனம் இந்த முறைகேட்டை எப்போதும் ஆதரிக்காது.  அந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.   மேலும் அவர்கள் மீது நிர்வாகம் விசாரணை நடத்தி தக்க தண்டனையை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவில் விமானத்துறை அமைச்சர் இது குறித்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   நடந்த நிகழ்வைப் பற்றிய முழு தகவல் அறிக்கையை உடனடியாக அளிக்க வேண்டும் என சிவில் விமானத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து உடனடியாக அந்த விமான நிறுவன அதிகாரிகள்,  ஊழியர்கள் மற்றும் தாக்கப்பட்ட பயணிகள் தன் முன் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.