சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் 131 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தல்!

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வீல் தமிழத்தை சேர்ந்த 131 மாணவர்கள் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளனர். இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முக தேர்விற்கு தேர்ச்சிப்பெற்ற நிலையில் அதில் 131 மாணவர்கள் தமிழக்த்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

upsc

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் இந்திய அளவில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல பணிகளுக்கு தகுதியான, திறமையான மாணவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பணியாணையை வழங்கி வருகிறது. இதற்கான தேர்வுகள் மூன்றுக்கட்டமாக நடைபெறுகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என திறமையான நபர்கள் 3 கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த தேர்வுகள் இந்திய அளவில் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதல்நிலை தேர்வை சுமார் ஆறு லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில் தேர்ச்சி அடைந்த 10,468 பேர் அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வை எதிர்க் கொண்டனர். அதன் முடிவுகள் இன்று வெளியாகியது. இதில், 1994 பேர் தேர்ச்சிப்பெற்ற நிலையில், நேர்முக தேர்வுக்கு செல்ல உள்ளனர். அவர்களில் 131 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மை தேர்வில் தேர்ச்சிப்பெற்ற இவர்களுக்கு பிப்ரவரி 4ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

கார்ட்டூன் கேலரி