நீதிபதிகள் விடுமுறை எடுக்க தடை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் அதிரடி

டில்லி:

வசர தேவையின்றி, வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும்,  ஊக்கத் தோடு  செயலாற்றுங்கள் என்றும்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2ந்தேதியுடன்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா பதவி ஓய்வு பெற்ற நிலையில் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து  உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அவசர வழக்கு எது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். தேவையின்றி  அவசரவழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று கூறினார். மேலும்,  நாளை ஒருவரை  தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது  ஒருவரை உடனே  வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம் மற்றபடி அவசர வழக்கு தேவையற்றது.

ஏற்கனவே நீதிமன்றங்கிள்ல, அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை வேகமாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது’’ எனக் கூறினார்.

இந்த நிலையில் வார நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.  பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் உரையாற்றியபோது,   ‘‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருக்கின்றன. அவற்றை முடிப்பது நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அவசர தேவை தவிர நீதிபதிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் உயர் நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிகளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றை விசாரித்து தீர்க்க வேண்டிய கட்டா யத்தில் நீதிமன்றங்கள் உள்ளன.

இந்நிலையில் நீதித்துறை பணிச்சுமையில் இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம், ஊக்கத்தோடு செயலாற்றுகள்  என அனைத்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may have missed