டில்லி

யோத்தி ராமர் கோவில் நில வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 18க்குள் அவசியம் முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வலியுறுத்தி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததாக கூறப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது.   அங்கு மீண்டும் ராமர் கோவில் எழுப்ப நடந்த முயற்சிகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருகிறது.   இந்த வழக்கை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.   அதனால் இந்த  வழக்கு விசாரணையை அமர்வு தினசரி  நடத்தி வருகிறது.

இன்று இந்த வழக்கின் 32 ஆம் நாள் விசாரணை நடந்தது.   அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 18  ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும் எனவும் அதனால் அனைத்து தரப்பு வாதங்களையும் இன்னும் பத்தரை நாட்களில் முடித்தாக வேண்டும் எனவும் நினைவூட்டி உள்ளார்.