டில்லி:

யோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நேற்று முதன் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை யின்போது, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்துக்கு சொந்தம்  கொண்டாடும் அமைப்புகளில் ஒன்றான  நிர்மோகி அகாரா அமைப்பு,  அயோத்தி நிலம் சொந்தம் என்பது தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ மூல ஆதாரங்களை 2 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்ற நீதிபதி தனஞ்சய சத்திரசூட் ஆணையிட்டார்.

யோத்தியில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து,  சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா, நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்க உச்சநீதி மன்றம் முடிவு செய்தது. ஆனால், த்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், 5 நீதிபதிகள் அமர்வு இறுதி விசாரணையை நேற்று முதல் (6ந்தேதி) தொடங்கியுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, நிர்மோகி அக்காரா அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுஷில் ஜெயின், ராமர் பிறந்த இடமும், அதன் உள்வளாகமும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக தங்கள் வசமே இருந்ததாகவும்,  சீதா ரசோய், சபூத்ரா, பந்தர் கிரஹ் அமைந்துள்ள வெளிவளாகமும் தங்கள் வசமே இருந்ததாகவும், இந்த இடம் தொடர்பாக ஒருபோதும் சர்ச்சைகள் எழுந்ததில்லை என அவர் வாதிட்டார்.

கட்டிடத்திற்குள் 1934ஆம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், முழுமையாக அது தங்கள் வசமே இருந்ததாகவும் நிர்மோகி அக்காரா தரப்பில் வாதிடப்பட்டது.

“இந்த வழக்கு 1908 ஆம் ஆண்டின் வரம்புச் சட்டத்தின் 47 வது பிரிவின் கீழ் உள்ளது. இந்த சொத்து 145 சிஆர்பிசி பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. மாஜிஸ்திரேட்டின் இறுதி உத்தரவுக்குப் பிறகுதான் வரம்பு காலம் இயங்கத் தொடங்குகிறது. இறுதி உத்தரவு மாஜிஸ்திரேட் நிறைவேற்றாததால், இந்த சர்ச்சை தொடர்கிறது என்றும், ஜெயின் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  உங்களுக்கு ஆதரவாக ஏதேனும் வருவாய் பதிவு இருந்தால், அது உங்களுக்கு ஆதரவாக ஒரு நல்ல சான்று ” அப்படி ஏதேனும் இருக்கிறதா என்று தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள்  எஸ் எ போப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ் எ நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து வாதாடிய நிர்மோகி அகாடா வழக்கறிஞர் சுசீல்குமார் ஜெயின், கடந்த 100 ஆண்டுகளாக இந்த இடத்தின் உள்முற்றம் நிர்மோகி அகாடாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராம ஜென்மஸ்தானம் என்று கூறப்படும் இடமும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

1950 ல் அகற்றப்படுதல் நடந்தபோது, ​​ஷெபைட் உரிமைகள் பாதிக்கப்பட்டன என்று கூறியவர்,  உடைமைகளை மீட்டெடுப்பதற்கான வரம்பு காலம் 12 ஆண்டுகள் ஆகும். இது தொடர்பாக 1959ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

1951-ல் இந்த இடத்தை இணைக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவில் உள்முற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  சீதையின் சமையலறை, பீடம் மற்றும் பண்டக சாலை ஆகியவை அடங்கிய வெளிமுற்றமும் (சீதா ரசோயி) எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமுற்றம் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை. எனவே ராமஜென்ம ஸ்தானத்தின் உள்முற்றம் பற்றி மட்டுமே எங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளோம்.

நிர்மாகி அகாடா அயோத்தியில் பல கோவில்களை பராமரித்து வருகிறது. சட்ட ரீதியாக எங்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் கோவிலை பராமரிப்பது தொடர்பான உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உங்கள் வசம் அதற்கான ஆதாரங்கள் உள்ளதா? அல்லது அந்த இடத்தின் உரிமை உங்களிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுசீல்குமார் ஜெயின், அதன் உரிமை எங்களிடம் உள்ளது என்றும், தொடர்ந்து வழிபாடு மற்றும் நமாஸ் நடைபெறாத இடங்களை மசூதி என்று கருத முடியாது என்பது தொடர்பான சில தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான ஆதாரங்கள் வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர். டாக்குமெண்ட் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேட்டார். நீதிபதி சந்திரசூட்டும் இது தொடர்பான உண்மையான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு  நிர்மோகி அகாடா ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் அலகாபாத் நீதிமன்றத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறோம். அதை வைத்துதான் அங்கு தீர்ப்பு வழங்கினார்கள். வேறு ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆதாரங்கள் எல்லாம் 1982ல் வழிப்பறியில் இழந்து விட்டோம் . அதனால் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் 1934-ம் ஆண்டில் இருந்து முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே நிலம் குறித்த அகராராவின் கூற்று சட்டபூர்வமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தனஞ்சய சத்திரசூட்,  நிர்மோகி ஆகாராவுக்கு தான் அயோத்தி நிலம் சொந்தம் என்பது தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ மூல ஆதாரங்களை அடுத்த 2 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்ற நீதிபதி ஆணையிட்டுள்ளார்.