சட்டப் பட்டதாரிகள் அனைவரும் வழக்கறிஞர் பணிக்கு வராதது ஏன்? : ரஞ்சன் கோகாய்

டில்லி

ழக்கறிஞர்கள் பணி குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சட்டத்தில் பட்டப் படிப்பு படித்தோருக்கான பட்டங்கள்,  சிறந்து விளங்கியோருக்கு தங்கப் பதக்கங்கள், ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. டில்லி தலைமைச் செயலர் விஜய்குமார் தேவ் எல் எல் எம் படத்தைப் பெற்றார். விழாவில் ரஞ்சன் கோகாய் உரையாற்றினார்.

ரஞ்சன் கோகாய் தனது உரையில், “ஐந்து வருடக் கலை மற்றும் சட்டக் கல்வி தனது நோக்கத்தை அடைந்துள்ளதா என்பதை நாம் சிறிது கவனிக்க வேண்டும். இந்த பட்டப்படிப்புக்கான முழுப்பயனையும் நாம் அடையவில்லை எனினும்  நாம் தேவையான மாறுதல்களை அடைந்துள்ளோம். இந்த கல்வி அளிப்பது தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை வலுவாக்குவதாகும். இந்த சட்டக் கல்வி மூலம் புதிய தலைமுறை வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தைத் திறம்பட அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு எத்தனை சட்டக் கல்வி நிலையங்கள் செய்கின்றன? இதனால் பல சட்டப் பட்டதாரிகள் வழக்கறிஞர் பணிக்கு வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்த பாடத் திட்டம் சமூக ஆர்வம் மிக்க வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். ஒரு வழக்கறிஞரின் பணி சமூகத்துக்கு வழக்கறிஞர், சட்ட உதவி, சட்ட அமைப்பு, சீர்திருத்தம் ஆகியவை மட்டுமின்றி உரைகள், விவாத மேடைகள் அமைத்து சட்ட அறிவை வளர்ப்பதுமாகும்.

சட்டப் பட்டதாரிகளுக்குப் பல நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான வேலை   வாய்ப்புக்களை அளிக்கும் போது ஒரு சிலர் வழக்காடுவதை விரும்புவது ஏன் என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஒரு வழக்கறிஞர் வழக்காடுவதிலும், மத்தியஸ்தத்திலும் மட்டும் அன்றி அறிவை புகட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலமே ஒரு சட்டப் பட்டதாரிக்குத் தனது பணியில் முழு திருப்தி அடைய முடியும்” எனத் தெரிவித்தார்.