மோடிக்கு எச்சரிக்கை:கண்ணீர் விட்ட தலைமை நீதிபதி

புது டெல்லி  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,  முதலமைச்சர்கள், மாநிலத் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியத் தலைமை நீதிபதி தாகூர் கண்ணீர் மல்க, நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுகோள் விடுத்தார்.

அவர் பேசுகையில், தற்பொழுது இந்திய  நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 1 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி வீதம் இருக்கின்றது. இதனை 1 லட்சம் பேருக்கு 5 நீதிபதி வீதம் உயர்த்தி நியமிக்க வேண்டும் என்று 2002ல சட்ட ஆணையம் சிபாரிசு செய்திருந்தது. இன்று வரை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசு இதனை செயல்படுத்தவில்லை. வழக்கு சுமையை நீதிபதிகள் மட்டும் எத்தனை காலம் தாங்க முடியும்?

அமெரிக்காவில் உள்ள நீதிபதிகள்,  ஒரு ஆண்டுக்கு சராசரியாக  வெறும் 81  வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால், இந்திய நீதிபதிகள் ஆண்டுக்கு  சராசரியாக 2600 வழக்குகளை விசாரிக்கின்றனர். கீழமை நீதிமன்றங்கள் ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வழக்குகளை விசாரிக்கின்றனர். இந்த எண்ணிக்கை, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நீதிபதிகளி ஆச்சர்யப் படுத்த தவறுவதில்லை. தற்பொழுது 21,000 ஆக உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையை  40,000ஆக உயர்த்தவேண்டும்.

மோடிக்கும் அவர் இரண்டு எச்சரிக்கைகளை தரத்  தவறவில்லை  இந்திய தலைமை நீதிபதி தீரத் சிங் தாகூர்:

  1. தொழிற்சாலைகளின் வழக்குகளை விரைந்து முடிக்க, தற்பொழுது உள்ள நீதிபதிகளைக் கொண்டே, ” சிறப்பு வர்த்தக நீதிமன்றம்” அமைக்கும் மோடி அரசின் முடிவு நிச்சயம் பயனளிக்காது. அது பழைய ஊறுகாய் எடுத்து புதிய டப்பாவில் வைத்த கதைதான்.
  2. மத்திய அரசு எடுத்து வரும் எஃப்.டி.ஐ. மற்றும் மேக் இன் இந்தியா போன்றத் திட்டங்கள் உன்மையில் செயல்படுத்தப் படவேண்டுமெனில், முதலில் இந்திய நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துங்கள்.

அவர் அழுததை வெளியிடும் ஊடகங்கள், அவரது மேற்கண்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனவா என்பது கேள்விகுறி…

மோடியுடன் தலைமை நீதிபதி

 

நீதிபதி எண்ணிக்கை உயர்த்துவது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் பிரதமர். காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.