தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறையும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

https://www.instagram.com/p/B-CNlS-jDqc/

இதற்டையே, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. நேற்றுவரை, கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

https://twitter.com/ImRaina/status/1241693293605355521

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

இந்த சமயத்திலும் இரவு பகல் பாராது கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து கைத்தட்ட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி சரியாக 5 மணிக்கு மக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோன், தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் 5 மணிக்கு கை தட்டியும், ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்தனர்.

https://www.instagram.com/p/B-CPZPYBtgH/

 

https://www.instagram.com/p/B-CQQfanykP/

https://www.instagram.com/p/B-Cd6xUnQo4/