தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில். ஒருவருக்கு ஒருவர் கத்தியால் குத்தியதால், 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் கத்தியால் சண்டை போட்டதை கண்ட சக மாணவர்கள் அலறியடித்து ஓடினார். இதுகுறித்துஆசிரியர்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் அரசுப் பள்ளியில் படித்து வரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

இன்று காலை திடீரென இரு வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலின்போது, 10வது வகுப்பை சேர்ந்த மாணவன்,   திடீரென 12ம் வகுப்பு மாணவன் 2 பேரை  கத்தியால் குத்தியதாகவும்  அப்போது 12ம்வ குப்பு மாணவர், தன்னை குத்திய மாணவனை திருப்பி கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் 3 பேருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட நிலையில், இதைக்கண்ட சக மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் உடடினயாக காவல்துறைக்கு புகார் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக   கண்டமனூா் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.  பள்ளி மாணவா்களிடையே  கத்தி கலாச்சாரம் உருவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட், தல’ போன்ற மாணவர்கள் தலைவர்கள் பதவிகளுக்காக அவ்வப்போது சண்டை நடைபெறுவது உண்டு. இதில் கத்தி கலாச்சாரமும் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களிடையே கத்தி கலாச்சாரம் உருவாகி இருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.