சிஏஏ போராட்டத்தில் மோதல்-காவலர் பலி; போலீசார் துப்பாக்கிச் சூடு – டெல்லியில் பதற்றம்…

டெல்லி:

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும்  நிலையில், இரு தரனப்பினருக்கு இடையே  இன்று வன்முறை வெடித்தது. இதையொட்டி, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி  போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் போராட்டக்கார்கள் கல்வீசியதில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று  டில்லி  மஜபூர், யமுனா விஹார் உள்பட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி மஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற வந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட போராட்டத்தின்போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசித்தாக்கிக்கொண்டனர். கலவரத்தை ஒடுக்க முயன்ற காவல்துறையினர்மீதும்  கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதனால் பதற்றம் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கல்வீச்சு தாக்குதலில் காயம் அடைந்த காவலர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோகுல்புரி என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையில் போலீஸ் உயரதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி வேத் பிரகாஷ் சூர்யா டி.சி.பி (வடகிழக்கு), இரு குழுக்களுக்கிடை ஏற்பட்ட வாக்குதம் காரணமாக  மோதல் ஏற்பட்டுள்ளது.  “நாங்கள் இரு தரப்பினரிடமும் பேசினோம், இப்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்று  தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இரவு டெல்லியில் தங்க உள்ள நிலையில், அங்கு போராட்டம், வன்முறை, துப்பாக்கிச் சூடு நடைபெற்றது பரபரப்பையும், பதற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் பத்து இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது.