மகாராஷ்டிராவில் மத கலவரம்: ஒருவர் பலி, 100க்கும் மேற்பட்ட கடைகள், வாகனங்கள் தீக்கிரை

--

அவுரங்காபாத்:

காராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக வன்முறை வெடித்தது. இதன் காரணமாக 1 ஒருவர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த வன்முறையின் போது அந்த பகுதியில் இருந்த  வீடுகள், கடைகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்ட்டன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கலவரக்காரக்ளை தடியடி கொண்டும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவுரங்கபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள. நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத குடிநீர் இணைப்பு தொடர்பாக இரு மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றி வன்முறையாக உருவெடுத்ததாகவும், அந்தபகுதியை சேர்ந்த இளைஞர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என்றும்,  இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

You may have missed