க்னோ

சிவசேனா தலைவர் உதவ் தாக்கரேவும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகியும் அறிக்கைப் போர் தொடங்கி உள்ளனர்.

பாஜகவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சிவசேனா தற்போது தனது கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது.   கூட்டணி முறிவு ஏற்பட்டதில் இருந்தே சிவசேனா பாஜகவின் ஒவ்வொரு செயலையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.   பாஜகவும் பல சமயங்களில் பதிலடி கொடுத்து வருகிறது.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் இடைத் தேர்தல் நடைபெறும் பால்கர் தொகுதிக்கு உ பி முதல்வர் யோகி வந்திருந்தார்.  அப்போது அவர் மகாராஷ்டிர மன்னர் வீர சிவாஜியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.   அப்போது அவர் தனது காலணிகளை கழற்றவில்லை.

அதற்கு சிவசேனாவின் பத்திரிகையான சாமனாவில், “உ பி முதல்வர் யோகி இல்லை, போகி ஆவார்.   ஒரு மடாதிபதியாக உள்ளவர் முதல்வர் பதவியை வகிக்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது.  வீரசிவாஜியின் படத்துக்கு அவர் காலணி அணிந்த படி மாலை அணிவிக்கிறார்.   அதைப் பார்க்கையில் எனக்கு அதே காலணிகளைக் கொண்டு அவரைத் தாக்க வேண்டும் போல இருந்தது” என சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

அதற்கு யோகி, “சத்ரபதி சிவாஜியின் படத்துக்கு நான் மாலை அணிவித்தது பற்றி உதவ் தாக்கரே அநாகரீகமாக விமர்சித்துள்ளார்.   நான் அவரை விட மிகவும் நாகரீகமானவன்ன்.   எனக்கு அவர் நாகரீகத்தை பற்றி கற்றுத் தர வேண்டியதில்லை.  நான் சத்ரபதி சிவாஜி மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன்.  நான் அவரை அவமானப்படுத்தியதாகக் கூறியது தவறு” என பதில் அளித்துளார்.