உ. பி.  : முதல்வர் – துணை முதல்வர் மோதல் வலுக்கிறது.

க்னோ

த்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகிக்கும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது.

உத்திரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலின் போது பிற்படுத்தப் பட்டோர் பிரதிநிதியாக களம் இறக்கப் பட்டவர் கேசவ் பிரசாத் மௌரியா.    பாஜக தேர்தலில் வென்ற பின் இவருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையில் முதல்வர் பதவிக்கான போட்டி இருந்தது.

யோகி முதல்வராக கட்சி தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.    அது மட்டுமின்றி இரண்டாவது இடத்திலும், மௌரியாவுடன் மற்றொரு பாஜக உறுப்பினரான தினேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவை அனைத்தும் மௌரியாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.   மறைமுகமாக தனது வெறுப்பைக் காட்டிக் கொண்டு வந்தார்.

ஒருமுறை யோகி டில்லிக்கு சென்ற போது மௌரியா தனது பெயர் பலகையை முதல்வர் அறை வாசலில் மாட்டச் செய்தார்.  அதற்கு  தாமும் இணை முதல்வர் என விளக்கமும் கொடுத்தார்.   ஆனால் யோகி டில்லியில் இருந்து வந்ததும் இந்த பெயர் பலகையை நீக்கி விட்டார்.

இந்த மோதல் மேலும் வலுக்கிறதாக உத்திரப் பிரதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமிபத்தில் லக்னோவில்  நடந்த உத்திரப்பிரதேச தினம் நிகழ்ச்சியில் மௌரியா கலந்துக் கொள்ளவில்லை.   யோகி மட்டுமே கலந்துக் கொண்டார்.   தவிர சமீபகாலங்களில் மௌரியா எந்த ஒரு அரசு நிகழ்விலும் கலந்துக் கொள்வதில்லை.

இந்த மாதம் 20ஆம் தேதி காசியில் நடந்த இளைஞர் அணி திருவிழாவுக்கு மௌரியா அழைக்க்கப்படவில்லை.    அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சர்கள் கூட்டத்தையும் மௌரியா புறக்கணித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநில அமைப்பு தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப் பட்ட போதும் மௌரியா அந்த விழாவில் மௌரியா காணப்படவில்லை.    அவர் மும்பை சென்றுள்ளதால் விழாவுக்கு வரவில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டது.  அதே நேரத்தில் அவருடன் சென்ற மற்ற இரு பாஜக சட்டசபை உறுப்பினர்கள் மும்பையில் இருந்து வந்து கலந்துக் கொண்டுள்ளனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கிடையே உள்ள இந்த மோதல் குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரியும் என சொல்லப்படுகிறது.

இருவரையும் இணைக்கும் முயற்சியில் மாநில ஆர் எஸ் எஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது.