பீகாரில் பயங்கரம்: 10வது வகுப்பு மாணவி ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம்!

பாட்னா,

பீகாரில் ஓடும் ரயிலில்10வது வகுப்பு படிக்கும் சிறுமி  6 பேர் கொண்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.   உயிருக்கு ஆபத்தான நிலையில்  அந்த சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் லக்ஷிசரை என்ற இடத்ததிற்கும், கிமுல் ஜங்ஷன் என்ற இடத்திற்கம் இடையே ரெயில் வந்துகொண்டிருந்தபோது,   10வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்  6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து  வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்  கடந்த வியாழக்கிழமை இரவு லக்கிசராய் மாவட்டத்தில் லாகசாக் கிராமத்தில் இருந்து பெண் 6 பேர் கொண்ட கும்பலால் தூக்கி வரப்பட்டு, ரெயிலினுள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலையில் அந்த கும்பல் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளது.

ஆபத்தான நிலையில்  தண்டவாளம் ஓரம் கிடந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  பின்னர்  அவரை சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (பி.எம்.சி.சி) சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அக் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதுகுறித்த அந்த பெண் கொடுத்த தகவலின்படி இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஎஸ்பி லக்கிசராய்  பங்கஜ் குமார் தலைமையிலான ஒரு குழு  விசாரணை செய்து வருகிறது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.