பள்ளி மாணவி போதையில் மரணம்!! நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

suicide

நொய்டா:

டெல்லி அருகே நொய்டாவில் பிளஸ் 2 மாணவி போதை மருந்து அதிகம் சாப்பிட்டு மரணம் அடைந்த சம்வபம் தொடர்பாக நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாடு கண்டம் தெரிவித்துள்ளது.

கடந்த 24ம் தேதி மாலை நொய்டாவில் பிளஸ் 2 மாணவி மனிஷ் காரி என்பவர் திடீரென மாயமானார். கடைசியாக அந்த மாணவியை நைஜீரியாவை சேர்ந்தவர்களுடன் பார்த்ததாக வதந்தி பரவியது. இதைய டுத்து உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள ஆப்ரிக்கா மாணவர்களின் வீடுகளை புகுந்து மாணவியை தேடினர்.

ஆனால், மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. நைஜீரியர்கள் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதன் பின்னர் மறுநாள் அந்த மாணவி அதிக போதை மருந்து உட்கொண்டு இறந்துகிடந்தார்.

மாணவி வீட்டின் அருகில் வசிக்கும் நைஜீரிய மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் சந்தேகப்பட்டு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் அந்த மாணவியை கொலை செய்திருக்கலாம் என்று கே £ணத்தில் விசாரணை நடந்தது. பின்னர் இதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை போலீசார் வி டுவித்தனர்.

இதையடுத்து கடந்த 27ம் தேதி பாரி சவுக் சந்திப்பு பகுதியில் உள்ளூர் வாசிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 4 நைஜீரிய மாணவர்கள் காயமடைந்தனர். அந்த பகுதியில் வசிக்கும் ஆப்ரிக்கர்கள் உடனடியாக வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிகை விடுத்தனர்.

28ம் தேதி நொய்டாவில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வன்முறையில் ஈடுபட்ட 600 பேர் மீது வழ க்குப் பதிவு செய்துள்ளனர். 44 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 27ம் தேதி டெல்லி மால் ஒன்றில் 2 ஆப்ரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இனவாத பிரச்னையில் நொய்டாவில் ஒரு கும்பலால் கென்யா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கப்பட்டார். நொய்டாவில் நைஜீயர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் முகமது புகாரியின் வெளியுறவு விவகார உதவியாளர் அபைக் தாபிரி எரிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘‘குற்றவாளிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும். மேலும், நைஜீரியர்கள் ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதோடு, குற்ற செயல்களில் நைஜீரியர்கள் ஈடுபடுவதை ஏற்க முடியாது. இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என அபைக் தாபரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்து நொய்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நைஜீரியா தூதர் (பொறுபபு) ஒர்லு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், “மாணவர்களை அமைதிக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மாணவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் இந்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நைஜீரியா மாணவர் ஒருவர் கூறுகையில, “அமைதியாக வாழ வேண்டும் என்று தான் இந்தியாவுக்கு வ ந்தோம். அடிவாங்குவதற்கோ வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை” என்றார்.

இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதருக்கு அந்நாட்டு வெளியுறவு விவகாரத் துறை சம்மன் அனுப்பியது. அதில் நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமைச்சக செயலாளர் ஒலுசோலா எனிகனோலையேவிடம் இந்திய தூதர் நாகபூஷனரெட்டி நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

‘‘இது முதல் முறையல்ல. முறையான விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்க அனுமதிக்க கூடாது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்று எனிகனோலையே தெரிவித்தார்.

கடந்த 2013ம் ஆண்டு நைஜீரியாவை சேர்ந்தவ ஒருவர் உடல் ரத்தகாயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து கோவாவில் வன்முறை வெடித்தது. 200 நைஜீரியகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது,