சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி:

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவ மாணவிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.