தமிழ்நாடு 13-வது இடம்: இந்தியாவிலேயே சுத்தமான மாநிலம் சிக்கிம்!

ந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிக்கிம் மாநிலம்தான் சுத்தமான மாநிலம்  என்று என்எஸ்எஸ்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு சொல்லுகிறது.
கடந்த 2015 மே மாதம் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்(NSSO)மூலம் எடுக்கப்பட்ட மாநிலங்களில் சுத்தம் பற்றிய  கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
2016-ஆம் ஆண்டுக்கான சுவாச் பாரத் முடிவுகளை மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் சமீபத்தில் வெளியிட்டார்.
அதன்படி கிராமப்புறங்களில் உள்ள கழிவறைகளின் நிலை மற்றும் எண்ணிக்கையை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியாவிலேயே சுத்தமான மாநிலம் என்ற இடத்தை சிக்கிம் பெறுகிறது. இங்கு 98.2 சதவிகிதம் கழிப்பறை வசதிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இரண்டாவது இடத்தை 96.4 சதவிகித கழிப்பறை வசதிகளைக் கொண்டுள்ள கேரளம் பெறுகிறது.
இதைத் தொடர்ந்து மிசோரம்,  இமாச்சல பிரதேசம்,  நாகலாந்து, அரியானா,  பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா  ஆகிய மாநிலங்கள் சுத்தமான டாப் 10 மாநிலங்கள் என்ற  சிறப்பைப் பெற்றுள்ளன.
தமிழகம் 39.2 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் அழுக்கான மாநிலம் என்ற பெயரைப் பெற்றிருப்பது ஜார்கண்ட் மாநிலமாகும்.
இந்த சர்வேயை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்(NSSO)கடந்த ஆண்டு மே மாதத்தில் நாடு முழுவதும் 3,788 கிராமங்களில், 73,176 இல்லங்களில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி