2009-ஆம் ஆண்டை விட மோசமான கால கட்டத்தில் நுழைந்து விட்டது தெளிவாகிறது: ஐஎம்எஃப் தலைவர் தகவல்

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும், இது வளரும் நாடுகளுக்கு உதவ பெரியளவு நிதி தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

இதுகுறித்து ஆன்லைனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2009-ஆம் ஆண்டை விட மோசமான கால கட்டத்தில் நுழைந்து விட்டது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய பொருளாதார திடீரென நின்று விட்டது. இதனால், வளர்ந்து வரும் சந்தைகளின் ஒட்டுமொத்த நிதித் தேவைகளுக்கான நிதியின் மதிப்பீடு 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார், இந்த மதிப்பீடு மிகவும் கீழ்நோக்கி சென்று விட்டதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய வாரங்களில் 83 பில்லியன் டாலருக்கும் அதிகமான மூலதனத்தை வெளியேற்றியுள்ள வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள அரசாங்கங்கள், அதில் பெரும்பகுதியை ஈடுகட்ட முடியும் என்றும், ஆனால் தெளிவாக உள்நாட்டு வளங்கள் போதுமானதாக இல்லை என்பதால், இந்த நாடுகள் ஏற்கனவே அதிக கடன் சுமைகளால் கஷ்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள், குறைவான வருவாய் கொண்ட நாடுகளாக இருப்பத்துடன், இந்த நாடுகள் ஏற்கனவே சர்வதேச நிதியத்திடம் அவசர உதவிகள் கோரியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நாடுகளின் உள்நாட்டு வளங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்த ஜார்ஜீவா, இந்த நாடுகளின் நிதியை அதிகரிக்க செய்ய வேண்டும், அதுவே இந்த நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடன் வழங்குநரின் வழிநடத்தல் குழுவுடன், நடத்திய சந்திப்பை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொருளாதாரத்தை நிலைநிறுத்த அந்த நாடுகள், தற்போதைய நிலையான 50 பில்லியன் டாலர்களிலிருந்து அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்த 2.2 டிரில்லியன் டாலர் பொருளாதார தொகுப்பையும் தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், பொருளாதார நடவடிக்கைகளை திடீரென வீழ்த்துவதற்கு எதிராக உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மெருகூட்டுவது முற்றிலும் அவசியம்” என்று கூறினார்.