நெமிலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை

சென்னை

சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்னையில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மாநகரில் குடிநீர் ஆதாரமான ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.   தமிழகம் எங்கும் மழை பெய்துள்ள போதிலும் நகரில் மழை இல்லாததால் இந்த நீர் மட்டம் உயர வாய்ப்பின்றி உள்ளது.    இதனால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் கிடைக்கும் நீரை மக்களுக்கு அளித்து வருகிறது.

தமிழக அரசு இதையொட்டி புதிய கடல்நீர் சுத்திகரிக்கும் ஆலைகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை கோரியது.    அந்த அமைச்சகத்தின் ஆய்வாளர்கள் கடந்த மே மாதம் தங்கள் அறிக்கையை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தனர்.   அதன் அடிப்படையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதை ஒட்டி சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் பேரூரில் ரூ3912.16 கோடியில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ உள்ளது.    இந்த நிலையம் பேரூரின் கடற்கரை ஓரத்தில் அமைய உள்ளதால் சுனாமி நேரத்தில் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.  அதை ஒட்டி இந்த நிலையம் 6.5 மீட்டர் உயரமாக்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.