சிவில் சர்வீஸ் தேர்வில் முஸ்லீம்களின் தேர்ச்சி – விஷம் கக்கும் இந்துத்துவ ஊடகம்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், முஸ்லீம் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது தொடர்பாக, ஒரு இந்துத்துவா ஆதரவு சேனலின் உரிமையாளர் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

சுதர்ஷன் டிவி என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி சேனலை நடத்திவரும் சவ்ஹான்கே என்ற நபர், ஏற்கனவே தனது பெண் ஊழியர் ஒருவரை கற்பழித்த புகாருக்கு உள்ளானவர். இந்நிலையில், முஸ்லீம் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது தொடர்பாக வெறுப்பு பேச்சை உமிழ்ந்திருக்கும் அவர், தனது வீடியோவில் பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் குறிப்பிடமுடியாத அளவிற்கு அந்த நபரின் பேச்சு இழிவான வகையைச் சேர்ந்தது. இதை அவர் ‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரின் இந்த வெறுப்பு வீடியோ குறித்து பிரதமர் மோடி கண்டுகொள்ளாத நிலையில், ஐபிஎஸ் சங்கம் மட்டும் இதற்கு லேசான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

“சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், மத அடிப்படையிலான ஒரு புதிய கதையை வெளிப்படுத்துகிறது சுதர்ஷன் டிவி. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் வகுப்புவாத தன்மையுடைய ஊடக செயல்பாட்டை நாங்கள் கண்டனம் செய்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.