இந்தியாவை விட்டு வெளியேறும் அறிவாளிகள்!

இந்திய அரசாங்கத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியைவிட்டு திடீரென விலகியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது போல பொருளாதார அறிஞர்கள்   தங்களது பதவியை ராஜினாமா செய்வதும் பிறகு நாட்டைவிட்டு வெளியேறுவதும் தொடர்கிறது.

ஏற்கெனவே பொருளாதார அறிஞர் ரகுராம் கோவிந்தராஜன் இப்படித்தான்   நாட்டைவிட்டு வெளியேறினார்.

 

 

இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக இருந்தார். செப்டம்பர் 5, 2013இல் டி. சுப்பாராவை அடுத்து இப்பதவியில் 23 ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை ஏற்பதற்கு முன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்2008 இல் இவரை இந்திய அரசின் கவுரவப் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். 2003 முதல் 2007 வரை அனைத்துலக நாணய நிதியத்தில்முதன்மைப் பொருளியலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் பன்னாட்டு செட்டில்மென்டு வங்கியின் துணைத்தலைவராக அமர்த்தப்பட்டார்.

பிறகு இவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.

தற்போது அரவிந்த் சுப்பிரமணியன்   தனது பதவியைவிட்டு திடீரென விலகியிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சிறந்த பொருளாதார அறிஞர். இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞராக பதவி வகித்தார்.  அக்டோபர் 16, 2014 அன்று ரகுராம் கோவிந்தராஜனிடமிருந்து இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்தில் டென்னிசு வெதர்சுடோன் மூத்த ஆய்வாளராகவும் உலகளாவிய மேம்பாட்டு மையத்தில் மூத்த ஆய்வாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில்பொருளியலாளராக பொறுப்பு வகித்தார்.  இந்தியா, சீன மக்கள் குடியரசு, மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரச் செல்வாக்கு குறித்த வல்லுநராகக் கருதப்படுகிறார். ஆங்கிலத்தில் இந்தியாவின் முறை:பொருளியல் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் (India’s Turn: Understanding the Economic Transformation) என்ற நூலை 2008ல் எழுதினார்.  ஒளிமறைப்பு: சீனாவின் பொருளியல் முதன்மையின் நிழலில் வாழ்வது (Eclipse: Living in the Shadow of China’s Economic Dominance) என்ற நூலை செப்டம்பர் 2011ல் வெளியிட்டார். . மேலும் 2012இல் யார் மூலதனக் கணக்கை திறக்க வேண்டும் (Who Needs to Open the Capital Account?) என்ற நூலை இணைந்து பதிப்பித்துள்ளார்.

2011இல் ஃபாரின் பாலிசி இதழ் இவரை உலகின் முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக மதிப்பிட்டுள்ளது.

இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல் பரவியுள்ளது.

இப்படி அறிஞர்கள் நாட்டைவிட்டு தொடர்ந்து வெளியேறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.