நியூயார்க்: 

ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது.


உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை என்று கூறியுள்ளது. மேலும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

நேற்று ஐநா முன்னேற்ற திட்டம் வெளியிட்ட அறிக்கையின்படி, மக்களுடைய காலநிலை வாக்கெடுப்பிலிருந்து முக்கியமான காலநிலை கொள்கைகளை மக்கள் ஆதரிப்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 50 நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர், இது உலகின் பாதி மக்கள் தொகையை குறிக்கின்றது.

ஆனால் ஐநாவின் இந்த கணக்கெடுப்பு, உலகெங்கிலும் சரியான காலநிலைக்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது எனவும், இதற்காக தற்போது பல முயற்சிகளை எடுக்க ஐநா தயாராகி வருவதாகவும், ஐநா முன்னேற்றங்கள் திட்டத்தின் நிர்வாகி ஆசிம் ஸ்ட்டெய்னர் தெரிவித்துள்ளார்,