சுமை இல்ல வாயுக்களில் ஒன்றாக கார்பன் டை ஆக்சைடு  காற்றில் அபாய நிலையின் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது.

1958 முதல் வளிமண்டலத்தில்  உள்ள  காற்றில் CO2-ன் ஒரு மில்லியன் (பிபிஎம்) பாகங்களின் பாகங்களை முதன்முதலாக கணக்கிட்ட மாமுன லோக் அவதான நிலையம், மே-11,2019  அன்று எடுத்த  கணக்கீட்டின்படி கார்பன் டை ஆக்சைடு 415.26 ppm- ஆக இருந்தது.

மனித செயல்பாடுகளின் விளைவாக வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவுகள் வேகமாக அதிகரித்து வருகிறது.
மார்ச் 1958 ல் CO2 செறிவு 313ppm  இருந்த கார்பன் டை ஆக்சைடு , மே 2013 ல் 400 ppm ஆக உயர்ந்தது. 2019 மே 11 அன்று 413ppm ஆக உள்ளது. தொடர்ந்து உயர்ந்துவரும் கார்பன் டை ஆக்சைடால் வெப்ப நிலையும் தொடர்ந்து உயரும்

வானிலை ஆராய்ச்சியாளரான எரிக் ஹொட்வீஸ், மாமுன லோவை  எடுத்த கார்பன் டை ஆக்சைடு அளவீட்டை  குறிப்பிட்டு, “மனித வரலாற்றிலேயே இந்த அளவுதான் முதல் முறையாகும். என்று தெரிவித்துள்ளார்

புவி வெப்பமயமாதலை 1.5 C  க்குள்  கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே  இப்பிரச்னையை சமாளிக்க முடியும் என்றும் அதே சமயம் இப்போதுள்ள நிலைமையேதொடர்ந்தால் 2.3  C உயரும். அப்படி உயர்ந்தால்
கடலில்  பவளப்பாறைகள் இருக்காது,  ஏராளமான விலங்குகளும் தாவரங்களும் அழிந்து விடும். பேரழிவு தரக்கூடிய வெப்ப அலைகள், காட்டுத் தீ ஆகியவை அடிக்கடி ஏற்பட்டு, உலகில் சில பகுதிகளில் தொடர்ந்து வாழ முடியாமல் போகவும் வாய்ப்புகள் ஏற்படலாம்

குறிப்பாக கடல் மட்ட உயர்வு கடலோர நகரங்களை பாதிப்புக்குள்ளாகும், எனவே இதனால்  மனிதர்களுக்கு  மிகப் பெரிய பாதிப்பு இருக்கும்  என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

எனவே மரம் நடுங்கள், மழை பெறுங்கள், நீரை சேமியுங்கள் என்று பத்திரிக்கை.காம் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

-செல்வமுரளி