சென்னை:
மிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால்ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

டாஸ்மாக் விடுமுறை

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரட்ங்கு 3வது முறையாக  மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நேற்றுமுதல் மதுக்கடைகளைதிறக்க தமிழகஅரசு உத்தரவிட்டு, கடைகளை திறந்து கல்லா கட்டியது.
ஆனால், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் உள்பட  ஏராளமான பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பொது ஊரடங்கு முடியும் மே 17ந்தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. ஆனால், ஆன்லைனில்  மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி  வழங்கி உளளது.