சென்னை:

டைத்தேர்தல் வெற்றிப் பரிசாக,  தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்  ராதாகிருஷ்ணன்  தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகைக்கு 350 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய  டாக்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளதாக சமீபத்தில் தகவல்  வெளியானது இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தீபாவளியையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக தலைவர் பொன்னார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி  இடைதேர்தல் வெற்றி பரிசாக மது இல்லாத தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழம் முழுவதும்  உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி ரூ. 60 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையானது பண்டிகை காலங்களில் பல மடங்கு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. தீபாவளி பண்டிகையையொட்டி, மது விற்பனை அமோக இருப்பதும் வழக்கமானது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது,  330 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. எனவே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ. 350 கோடி அளவில்  மது விற்பனை செய்ய டாஸ்மாக நிறுவனம்  இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கான மதுவகைகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், அனைத்து மது வகைகளையும் குடிகாரர்களின்  கண்ணில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.