டெல்லியில் அதிகாலை மூன்று மணி வரை ஓட்டல்களில் மது அருந்தலாம்

 

டெல்லி :

லைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய கலால் துறை ஆணையாளர் தலைமையில் குழு ஒன்றை டெல்லி மாநில அரசு அமைத்தது.

அந்தக்குழு மது விற்பனையில் பல்வேறு ‘சீர்திருத்தங்களை’ அமல் படுத்த பரிந்துரை செய்துள்ளது.

 

ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் அதிகாலை மூன்று மணி வரை மது விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. (தற்போது அதிகாலை ஒரு மணி வரை மது விற்பனை செய்யலாம்).

டெல்லியில் 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என இப்போது விதிமுறை உள்ளது. அந்த வயது வரம்பை 21 ஆக குறைக்கலாம் என அந்த குழு சிபாரிசு செய்துள்ளது.

டெல்லி, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பக்கத்து மாநிலங்களில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டுமே மதுக்கடைகளுக்கு விடுமுறை நாள் ஆகும்.

அதனை பின்பற்றி டெல்லியிலும், ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் மதுக்கடைகளை அடைக்கலாம் என கலால் துறை ஆணையாளர் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

– பா. பாரதி