ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். இடையே சமரசம் : வழிகாட்டும் குழுவை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல்..

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். இடையே சமரசம் : வழிகாட்டும் குழுவை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல்..

முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து அ.தி.மு.க.வில் நிலவிய பனிப்போருக்கு சமரச தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியபடி, அ.தி.மு.க.வில் வழிகாட்டும் குழுவை அமைக்க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமியை, முதல்- அமைச்சர் வேட்பாளராக ,ஓ.பன்னீர்செல்வமே அறிவிக்க வேண்டும் என்பது சமரச திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வழிகாட்டும் குழுவில் மொத்தம் 11 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 6 பேரும்,  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும் வழிகாட்டும் குழுவில் அங்கம் வகிக்கும் வகையில் சமரச திட்டம் உருவாகி இருப்பதாக அ.தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

-பா.பாரதி.