பத்ம விருதுகள் பெற்றவர்களை வாழ்த்திய முதல்வர் & எதிர்க்கட்சித் தலைவர்!

சென்ன‍ை: இந்தாண்டு பத்ம விருதுகள் மொத்தம் 141 பேர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர்களின் 9 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

விருது பெற்றவர்களில், சமூக சேவகர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜகநாதன், டிவிஎஸ் வேணு ஸ்ரீனிவாசன், எழுத்தாளர் மனோஜ் தாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளன.

“நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் விருதுக்கு தேர்வானவர்களுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!” என்று முதல்வரும்,

“நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்..! தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகனாதன், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன், இசைக்கலைஞர்கள் லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!” என்று எதிர்க்கட்சித் தலைவரும் வாழ்த்தியுள்ளனர்.