குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசு : முதல்வர் அறிவிப்பு

 

சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு வழங்கும்.  தற்போது அந்தப் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன் படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,  இரண்டு அடி நீள கரும்புத் துண்டு. திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம் மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப் பட உள்ளது.