ஜெ. சமாதியில் வேட்பாளர் மதுசூதனனுடன் முதல்வர், துணைமுதல்வர் மரியாதை

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதன், அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஆர்.கே. நகர் தொகுதியில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன், மதியம் 1.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, அவர் சென்ன மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். அண்ணா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தனார்.

அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஜெ. சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் சமாதிக்கும், அண்ணா சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும்  21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, டிடிவி தினகரனும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜெயலலிதா நினை விடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.