எடப்பாடி மீதான புகார்: டெண்டர் விவரங்களை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத் துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், டெண்டர் விவரங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விளக்கம் அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் தொடர்பாக புகாரில் குறிப்பிட்டுள்ள டெண்டர் விவரங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், டெண்டர்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது எப்போது, குழுவில் உள்ளவர்கள் யார்? என்ற விவரங்களை வரும் 24-க்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 26ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.