தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலையில் மறியல் செய்யும் அளவுக்கு குடிநீர் பஞ்சம் உள்ளது. ஏற்கனவே எதிர்கட்சிகள் இது தொடர்பான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் அரசின் மீது வைக்கத்தொடங்கிவிட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், தலைமை செயலாளர் மற்றும் இதர அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் தடை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.