தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படம்! 19ந்தேதி எடப்பாடி திறப்பு

சென்னை:

மிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு (2018) நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தன் மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் போது, விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பில், மறைந்த சுதந்திர போராட்ட வீரர்  ராமசாமி படையாச்சியார் பிறந்த செப்.14ந்தேதி  அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். மேலும் ராமசாமி படையாச்சியார்  உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் எனவும் கூறியுருந்தார்.

அதன்படி, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வரும் 19ந்தேதி  ராமசாமி படையாச்சி முழு உருவ படம் திறந்து வைக்கப்படும் என்றும்,  அன்று மாலை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்தை திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர்  தனபால் தெரிவித்துள்ளார்.

பேரவையில் 5 மற்றும் 6 வது பாகத்துக்கு இடையே உருவப் படம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி