எடப்பாடி மாவட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ திமுகவுக்கு தாவல்!

சேலம்,

திமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்கிடையில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அதிரடியாக திமுகவில் இணைந்துள்ளார். இது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் தற்போது எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை எடப்பாடி அணியினர் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

அப்போது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நீக்கி தீர்மானம் இயற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன் திடீரென திமுகவுக்கு தாவியுள்ளார்.

சேலம் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த ரவிச்சந்திரன் திமுக வில்இணைந்துள்ளார்.

இதன் காரணமாக எடப்பாடி அணியினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். முதல்வரின் சொந்த மாவட்ட முன்னாள் எம்எல்ஏ ஒருவரே வேறு கட்சிக்கு மாறியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.