முதல்வர் வீடு திரும்பியதும் நலம் விசாரிப்பேன்! திருநாவுக்கரசர்

சென்னை:

மிழக முதல்வர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

pjueht

தமிழக முதல்வர் உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் விரைவில் குணமடைய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து, செய்தியாளர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசரிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் நலம் விசாரிப்பேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால் செல்லவில்லை.

அதிமுகவில் இருந்தபோது முதல்வரோடு இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறேன். அவர் பூரண நலம் பெறவேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, காவிரி விவகாரம் சம்பந்தமாக,  தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி