குமரியில் மக்கள் ஓலம்! ஆர்.கே. நகரில் முதல்வர் புன்சிரிப்பு!

ன்யாகுமரி

மீனவர்களைக் காணாமல் மக்கள் சோகத்தில் இருக்கையில் முதல்வர் புன்சிரிப்புடன் ஆர் கே நகரில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் அடித்த ஓகி புயலால் தென் தமிழகம் கடும் பாதிப்புக்குள்ளாகியது.  கன்யாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்பி வராததால் மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  மீனவர்களைக் கண்டு பிடிக்க முடியாததால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.   மாவட்டத்தில் பல பகுதிகளில் சரிந்து விழுந்த மின் கம்பங்களை மாற்றி மின்சார விநியோகம் செய்யும் வேலை நடந்து வருகிறது.   ஆனால் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இன்னும் இருளில் மூழ்கி உள்ளது.

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குமரி மக்கள் கொந்தளித்து இன்று ரயில் மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

இந்நிலையில் தவிக்கும் கன்யாகுமரி மக்களைக் காண இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை.  அவர் தற்பொது மும்முரமாக ஆர் கே நகரில் இடைத்தேர்தலுக்காக ஓட்டுச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  குமரி மக்கள் அங்கே தவித்துக் கொண்டிருக்க இவர் புன்னகை மாறா முகத்துடன் தொகுதியில் பவனி வந்துக் கொண்டிருக்கிறார்.

இதக் காணும் அனைவரும் “பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாதவர் யாராக இருப்பினும் அதற்கான விலையை விரைவில் தர வேண்டி வரும்” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

You may have missed