முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

--

சென்னை:

மிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்  அறிக்கை வெளியிட்டு உள்ளது.

jaya

தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக வியாழனன்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வரின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் கிளம்பியதால் நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் முதல்வரின் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் உடலில் நீர் சத்து குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஷ்வநாதன் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து  ஆஸ்பத்திரி முன்பாக தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். அனைத்து கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி முதல்  கர்நாடக, புதுச்சோரி முதல்வர்கள், திமுக தலைவர் கருணாநதி உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற வாழ்த்து கூறினர்.

ஜெ. உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்டுள்ள  அறிக்கை

ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும்,  வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.