போபால்:

த்திய பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பகல் 12 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.

மாநில கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமாவை வழங்குவேன் என்று தெரிவித்து உள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாகெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில், கமல் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக, அவரத காங்கிரஸ் கட்சிக்குள்ளே அதிருப்தி எழுந்த நிலையில், இளம் தலைவர்  ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 6 அமைச்சர்கள் உள்பட 22 பேர் வெளியேறி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இதனால், கமல் ஆட்சிக்கு பெரும்பான்மை பறிபோன நிலையில், பாஜக, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்த்தி வஙநதது. ஆனால், மாநில சபாநாயகர், கமல்நாத் ஆட்சியை காப்பாற்றும் நோக்கில், பதவிய ராஜினாமா செய்தத 22 பேரில்,  6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டு மற்ற 16 பேரின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் காலம்தாழ்த்தி வந்தார். மேலும் சபை கூட்டத்தையும் தள்ளி வைத்தார்.

இது தொடர்பாக பாஜக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது

அதையடுத்து இன்று மதியம் 12 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் மாநில முதல்வர் கமல்நாத். அப்போது, பாஜக மீது கடுமையாக சாடியவர், பெங்களூரில் எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை இந்த நாட்டு மக்கள் காணலாம் … உண்மை வெளிவரும். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

தனது அமைச்சரவை ராஜினாமா செய்வதாக அறிவித்த கமல்நாத்,  மாநில கவர்னரை சந்தித்து இன்று ராஜினாமா கடிதம் கொடுக்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசு தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், கமல்நாத் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.