கருணாநிதி பெயரில் புதுச்சேரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்

புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர்.

கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும்.

புதுச்சேரியின் சுகாதார காப்பீட்டு திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 3,40,000 குடும்பங்களுக்கு இந்திரா காந்தி பெயரில் முழு சுகாதார காப்பீட்டு திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்படுகிறது.இதில் வருமான வரம்பின்றி அனைவரும் முழு சிகிச்சை அளிக்கப்படும்..

இதற்காக சுகாதார துறைக்கு கூடுதலாக 11 கோடி ரூ ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது

இவ்வாறு நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.