குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோரும், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.