கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை,

த்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஏடிஎம் பயன்படுத்தும் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கை யாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளையும், விவசாயிகளுக்கு ருபே விவசாயக் கடன் அட்டை களையும் வழங்கி, 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் இன்று தொடங்கி வைத்தார்.

தற்போது நாடு முழுவதும் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில்  மட்டுமே ஏடிஎம் சேவை உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக, மற்ற வங்கிகளுக்கு இணையாக, மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஏடிஎம் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ள  19 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஏடிஎம் அட்டைகள் வழங்கும் சேவையையும் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் 6 பயணாளிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கினார்.

அதேபோல், 4.56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ருபே விவசாயக் கடன் அட்டை களை வழங்கும் சேவையை துவக்கி வைக்கும் விதமாக 5 விவசாயிகளுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏடிஎம் அட்டைகளையும், ருபே விவசாயக் கடன் அட்டைகளையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து  23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.