trr
சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், நாளை மறுநாள் அக்டோபர் 3-ந் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை  லட்சிய திமுக நிறுவனத் தலைவரும் திரைப்பட பிரமுகருமான டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“வரும் அக்டோபர் 3-ந் தேதி என் பிறந்த நாள் வருகிறது. ஒரு காலகட்டத்தில் என் பிறந்த நாளை பல ஏழையருக்கு உதவும் நாளாக கொண்டாடி கொண்டிருந்தேன். ஆனால் கொஞ்சங்காலமாக நான் என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.
காரணம் பெரிதாக நான் ஏதும் சாதனைகள் நிகழ்த்தியதாக நினைக்கவில்லை. என்னை பெரிய அதிகாரத்தில் அந்தஸ்தில் இருப்பவனாக கருதவில்லை. ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொண்டு அன்று என்னை வந்து சந்திக்கும் லட்சிய திமுக தொண்டர்களையும் என் ரசிகர்களையும் அபிமானிகளையும் சந்திக்காமல் தவிர்த்தது இல்லை.
ஆனால் இந்த முறை காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் உச்சநீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக உழலும் தமிழகத்தின் கண்மணியாக தமிழக முதல்வர் அதிமுக தலைவி அம்மா அவர்களைப் பார்க்கிறேன்.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் என் பிறந்த நாளன்று வழக்கமாக நான் சந்திக்கும் என் ரசிகர்களைக் கூட சந்திக்கும் மனநிலை எனக்கில்லை. நான் பிறந்த தஞ்சை தரணி காவிரி நீருக்காக திண்டாடும் போது மனம் பிறந்த நாள் கொண்டாடுமா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி உச்சநீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்வர் அம்மாவின் முயற்சியால்தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர்… இந்த நிலையில் அம்மா அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்தால் உண்மைத் தமிழர்கள் நெஞ்சம் வடிக்கிறது கண்ணீர்…
தமிழகத்தின் உண்மை நல விரும்பிகள் யாராக இருந்தாலும் அம்மா பூரண குணம் அடைந்து மக்கள் நல பணியாற்ற திரும்ப வேண்டுமென எல்லா வல்ல இறைவனிடம் செய்வோம் பிரார்த்தனை.. என்றுமே நல்லோருக்கு இறைவன்தான் துணை” என்று டி. ராஜேந்தர்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.