96 வயதில் 98 மார்க் எடுத்த கார்த்தியாயினி அம்மாவுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்த கேரள முதல்வர் (வீடியோ)
திருவனந்தபுரம்:
96 வயதிலும் அசரார் முதியோர் கல்விபயின்று தேர்வெழுதி அதில் ல் 98 மார்க் எடுத்து சாதனை படைத்த கார்த்தியாயினி அம்மாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயணி அம்மா, கேரள எழுத்தறிவுத் திட்டத்தின் ‘அக்ஷரலக்ஷம்’ திட்டத்தின் வாயிலாக முதியோர் கல்வி பயின்று, அது தொடர்பான தேர்வில் வெற்றிபெற்று, 98 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அவரது சாதனை நாட்டு மக்களி டையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை நேரில் தனது அலுவகத்துக்கு வரவழைத்து, அவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு ‘அக்ஷரலக்ஷம்’ என்ற இயக்கம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது.
இந்த இயக்கத்தினர் அனைவரும் கல்வியறிவு பெறும் வகையில், கல்வியறிவு பெறாத முதியோர்களை சந்தித்து, அவர்களுக்கு எழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி போன்றைவற்றை சொல்லிக்கொடுத்து வருகின்றனர்.
இந்த அமைப்பில் கல்வி பயின்ற ஆழப்புலாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி என்ற முதிய பெண்மணி தேர்வெழுதி 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த தேர்வை 42ஆயிரத்து 933 பேர் எழுதினர். இவர்களில் 40ஆயிரத்து 440 பேர் முதியோர்கள் என்றும்,8 சிறை கைதிகள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 6 மாதமாக அவர்கள் கல்வியறிவு பெற்ற நிலையில், இந்த தேர்வில் 96 வயது பாட்டியான கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மார்க் எடுத்து அசத்தி யுள்ளார். இதுகுறித்து அறிநித கேரள முதல்வர் அந்த மூதாட்டியை தனது அலுவலகத்துக்கு வரழைத்து,அவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை கேரள முதல்வர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
கேரள முதல்வருடன் கார்த்தியாயினி அம்மாள் அளவளாவும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்களும் காணுங்களேன்…