ரித்தீஷ், ஜெனிலியா ரூ .25 லட்சம் வெள்ள நிவாரண உதவி….!

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

3.78 லட்சம் பேர் அரசாங்கம் அமைத்துள்ள 432 தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மகாராஷ்டிரா முதல்வரிடம் பாலிவுட் நட்சத்திரம் ரித்தீஷ் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.

இவர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நன்றி தெரிவித்துள்ளார். ”மகாராஷ்டிரா வெள்ளத்திற்கான முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25,00,000/ – (ரூ. 25 லட்சம்) பங்களித்தமைக்கு நன்றி ரித்தீஷ் மற்றும் ஜெனிலியா தேஷ்முக்” என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி