ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை

ரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தாக்கத்தில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  நேற்று வரை 2.06 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 3409 பேர் உயிர் இழந்துள்ளனர்.   மாநிலத்தில்  சில இடங்களில் முழு ஊரடங்கு வேறு பல இடங்களில் தளர்வுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது.

ஜூலை 31 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இம்மாதத்தின் கடைசி கட்ட முழு ஊரடங்கு அமலிலுள்ளது.   மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஜூலை 31 முடிவுக்கு வருகிறது.   ஆகஸ்ட் 1 முதல் தளர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நாளை கொரோனா சூழல் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.  அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு குறித்த பிரதமரின் அறிவுரைகளைக் கேட்டறிய உள்ளார்  அதன் அடிப்படையில் வரும்29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஊரடங்கு குறித்த முடிவுகளை முதல்வர் எடுக்க உள்ளதாகக்  கூறப்படுகிறது.