சாமூண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா தோல்வி

பெங்களூரு:

ர்நாடக முதல்வர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான  சாமூண்டீஸ்விரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைந்தார். மற்றொரு தொகுதியான பதாமி தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே பாஜ வேட்பாளரை விட முன்னிலையில் உள்ளார்.

சித்தராமையா போட்டிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில், அவரை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா போட்டியிட்டார். தொடக்கம் முதலே தேவகவுடா முன்னிலை வகித்துவந்த நிலையில், 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையாவை வீழ்த்தி, தேவகவுடா  வெற்றி பெற்றுள்ளார்.

சித்தராமையாவின் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பதாமி தொகுதியில் சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் சித்தராமையா வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.