பெங்களூரு:

ர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாலை 4 மணிக்கு கவர்னர் பரமேஸ்வராவை சந்திக்க செல்கிறார் முதல்வர் சித்தராமையா. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பாரதியஜனதா ஆட்சி அமையும் என  எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், 114 இடங்கள் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது படிப்படியாக குறைந்து 107 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவையான நிலையில், பாஜ தனித்து ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இணைநது கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் சித்தராமையா, கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலாவை  (Vajubhai Rudabhai Vala) சந்திக்க இருக்கிறார்.

அப்போது, காங்கிரசுக்கு  மதசார்பற்ற ஜனதாளம் கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்குவார் என்றும், இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கவர்னருடனான சந்திப்பின்போது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர்களும் உடனிருப்பார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.