விலையில்லா வேட்டி சேலை வழங்குதல் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி வருகிறது.   இந்த வருடம் இந்த திட்டத்துக்காக சுமார் 485 கோடி செலவில் வேட்டி சேலைகள் வாங்கப் பட்டுள்ளன.  மொத்தம் 1 கோடியே 56 லட்சம் வேட்டி சேலைகள் வாங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுள்ளது.

இன்று தலைமைச் செயலக்த்தில் முதல்வர் 10 பயணாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கி தொடங்கி வைத்தார்.   நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் இந்த விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.