முதல்வர் பதவி ஏற்பு: பல்கலை அரங்கு தயார்
இன்று காலை முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவுக்கு சாதகமாகவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அக் கட்சி நூற்ருக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இக் கட்சியே அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த நிலையில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு விழா சென்னை பல்கலை மண்டபத்தி் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமீபத்திய மழை காரணமாக, மின் தடை ஏற்படாதவாறு பழுதுபார்க்கும் பணிகள் நடந்துவருகின்றன.
“மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா, வழக்கம்போல நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்பு நேரத்தை அறிவிப்பார்” என்று சொல்லப்படுகிறது.