பத்தாம் வகுப்பு தேர்வு – முதல்வர் முடிவுசெய்வார் என்கிறார் கல்வி அமைச்சர்!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதா? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவுசெய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கோபி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை மையத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர்தான் முடிவு செய்வார். 11ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்து, கொரோனா நிலைமை சீரான பின்னர்தான் முடிவு செய்ய முடியும்” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “கோபிச்செட்டி பாளையத்தில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும், கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோபி தொகுதியில் 11 ஆயிரத்து 271 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.